Home Health உணவே மருந்து முறையில் கேன்சரைத் தடுக்கும் வழிமுறைகள்…

உணவே மருந்து முறையில் கேன்சரைத் தடுக்கும் வழிமுறைகள்…

134

நுரையீரல், கல்லீரல், கணையம், கர்ப்பப்பை போன்ற இடங்களில் புற்றுநோய் தோன்றுகிறது. தொடக்கத்திலேயே தெரிந்துகொள்ள முடியாமல், முற்றிப்போன நிலையில் தான் வெளியே தெரிகிறது. எனவே பெரும்பாலும், உயிரைக் காப்பாற்ற முடிவதில்லை. நாம் இப்போது புற்று நோயை உணவு முறையில் வருமுன் தடுத்துக் காக்க முடியுமா? சரியான உணவுப் பழக்கத்தின் மூலம் இது சாத்தியமே. சத்தான உணவின் மூலம்தான் அது நடக்கும்.

1. இறைச்சி, மீன், முட்டை முதலியன உடலால் உற்பத்தி செய்ய முடியாத புரதம் அடங்கியவை. பருப்பு வகைகள் இரண்டாம்தர புரதச் சத்து. ஆனால், பருப்புடன் 100 கிராம் சோயா பீன்ஸ் சேர்த்துக் கொண்டால், அது 43 கிராம் புரதச் சத்தைத் தருவதால், இறச்சி, மீன், முட்டை தேவைப்படாது. இப்படியாக சரியான அளவு புரதச் சத்து உடலுக்குக் கிடைப்பது புற்று நோயைத் தடுக்கும் ஒருவழியாகும்.

2. புற்றைத் தவிர்க்கும் உணவுகள் அவரை, மொச்சை, பட்டாணி போன்ற தானியங்கள் , உருளைக் கிழங்கு ஆகும். இவற்றில் உள்ள ஏ.,சி.,இ., முதலிய வைட்டமிங்களும், பீட்டா, கெரோட்டின், செலினியம் முதலிய இயற்கைச் சத்துகளும், புற்றுநோய் வளர்ப்பானின் செயலைத் தடுத்து நிறுத்தி , குடல் பாதையில் புற்றுநோய்க் காரணிகள் உண்டாவதைத் தடுக்கின்றன.

3. முட்டைக்கோசு, காளிஃப்ளவர் முதலானவை கொலாஸ்ட்ரல் அளவைக் குறைத்து, மாரடைப்பு நோயைத் தடுக்கின்றன. காய்கறிகளில், இண்டோல் என்கிற சேர்மங்கள் உள்ளன. இவை புற்றுநோய்க் காரணிகளின் செயல்பாட்டைத் தடுக்கின்றன.

4. சமையல் எண்ணெய்கள், ரொட்டிகள், பிஸ்கெட்டுகள் முதலியன கெட்டுப் போகாமல் காக்க பியூட்டிலேட்டட் ஹைட்ராக்ஸி அன்சோல் என்ற ரசாயனம் கலக்கப்படுகிறது. இது ஆக்ஸிஜன் ஏற்றத்தைத் தடை செய்து உணவுப் பொருள் கெடாமல் காக்கிறது. இது 11 வகை புற்றுநோய்க் காரணிகளைத் தடுத்து நுரையீரல், உணவுக்குழாய் பெருங்குடல், நிணநீர் சுரப்பிகள் முதலிய உறுப்புகளில் புற்றுநோய் வராது தடுக்கிறது.

5. புகை மூலம் பக்குவப்படுத்தப்பட்ட காய்கள், புற்று நோயை ஏற்படுத்துவதையும், புற்றுநோய் தோன்றுவதையும் ஊக்குவிப்பதால், உணவில் பக்குவப்படுத்தப்பட்ட உணவு வகைகளைத் தடுக்கவேண்டும்.

6. காளான்களில் செலினியம் நிறைந்திருப்பதால், காளான், புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.

7. ஹைதராபாத் தேசிய சத்துணவு நிறுவன விஞ்ஞானிகள் தினம் உணவில் 1.5 கிராம் மஞ்சள் சேர்த்துக்கொல்வதன் வாயிலாக 15லிருந்து 30 நாட்களில் புற்று உற்பத்தியாகும் வாய்ப்பு செல்களில் குறைகிறது என்று கண்டுபிடித்துள்ளார்கள். மஞ்சளில் உள்ள ‘ கர்குமின் ‘ என்ற பொருள் புற்று நோய் உற்பத்தியைப் பெருமளவு குறைக்கிறது. புற்றுநோயைக் குணப்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.

8. மார்பிலும், மலக்குடலிலும் புற்றுநோய் வராமலிருக்க அரைவேக்காடு இறைச்சி, சிவப்பு மாமிசம், கூடுதல் கொழுப்பு வெண்ணெய் ஐஸ்கிரீம் ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும்.
9. உணவுக் குழாயில் புற்றுநோய் ஏற்படுத்துபவை அதிக உப்பு, சூடான டீ. ,அதிக கார உணவு, மாமிசக் கொழுப்புணவு விட்டமின் சத்துக் குறைவு ஆகியவனவாகும்.

10. புகையிலை, புகை பிடித்தல் நுரையீரல் புற்றுநோயை உண்டாக்குகிறது. கண் மங்குதல், நுரையீரல் அழற்சி, மாரடைப்பு, ஆண்மைக்குறைவு, பக்கவாதம் முதலிய பிற நோய்களும் புகை பிடிப்பதால் வருகிறது.

11. இரைப்பைப் புற்றுநோய்க்கு அளவுக்கு மீறிய குடிப்பழக்கம், அதிக எண்ணெயில் வறுத்த பொருள்களை உண்ணுதல் காரணமாகும்.

12. மலச்சிக்கல் உடையவர்களுக்கு, பெருங்குடல் புற்றுநோய் வரும். அசைவ உணவு மலச்சிக்கலை ஏற்படுத்தும். நார்ச்சத்து உணவில் குறைந்தால், மலச் சிக்கல் வரும். மலம் பெருங்குடலில் அதிக நேரம் தங்குவது அல்லது மலத்தின் கிருமிகள் மலத்தை கருகச் செய்து புற்று நோயை உண்டாக்கலாம்.

இந்தத் தகவல்களை நிச்சயம் ஒரு விழிப்புணர்வைத் தோற்றுவித்துப் புற்று நோயர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தப்படட்டும்.