Home Tamil Movie Reviews துப்பறிவாளன் – விமர்சனம்

துப்பறிவாளன் – விமர்சனம்

15
Theneo tv ratings
  • Ratings

Summary

கடைசி 30 நிமிடக் காட்சிகள்தான் பரபர வென ஓடுகின்றன. திருப்திகரமான படம் என்று பேசப்படுகிறது.

3
நடிகர்கள்: விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், கே பாக்யராஜ், ஆன்ட்ரியா
ஒளிப்பதிவு: கார்த்திக்
இசை: அரோல் கரோலி

 

தயாரிப்பு: விஷால் ஃபிலிம் ஃபேக்டரி
இயக்கம்:  மிஷ்கின்

ஒவ்வொரு இயக்குநரும் தங்களுக்கென்று ஒரு பாணியை வைத்துக் கொள்வது, கடைப்பிடிப்பது வழக்கம்தான். தப்பில்லை. ஆனால் எல்லா படங்களிலும் ஒரே பாணியிலான காட்சியமைப்பையும் தொடர்வது பெரிய அலுப்பைத் தந்துவிடும். பெரிய படிப்பாளி மிஷ்கின், இந்த சாதாரண விஷயத்தைப் புரிந்து கொள்வது நல்லது.

வின்சென்ட் அசோகன் பிறந்த நாளை மனைவி சிம்ரன் மற்றும் குழந்தைகளோடு கேக் வெட்டி கொண்டாடுகிறார். மகன் ஒரு பிறந்த நாள் பரிசு தரும்போது திடீரென மின்னல் தாக்குகிறது. வின்சென்ட் அசோகனும், ஒரு மகனும் அங்கேயே இறந்துவிடுகிறார்கள். அடுத்து போலீஸ் அதிகாரி ஆடுகளம் நரேன்… ஒரு மாலில் ஏதோ லேசாகக் குத்தியது போல உணர்கிறார். அடுத்த ஓரிரு நாளில் ஒரு மீட்டிங்கில் சரிந்து விழுந்து இறக்கிறார். அதில் மர்மம் இருப்பதாக நம்புகிறது போலீஸ். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஷெர்லக் ஹோம்ஸ் போல ஒரு அதி புத்திசாலி தனியார் துப்பறியும் நிபுணர் விஷால். கொஞ்சம் கிறுக்குத்தனம் உண்டு. எந்தக் கேஸாக இருந்தாலும் ஜஸ்ட் லைக் தட் துப்பறிந்து விடுவார். ஆனால் சவாலான கேஸ் எதுவும் வரவில்லையே என்ற கடுப்பில் இருக்கும் அவருக்கு, ஒரு சிறுவன் தன் நாய்க்குட்டியை யாரோ சுட்டுவிட்டதாகக் கூறி ஒரு கேஸைத் தருகிறான்.

அந்த வழக்கை விசாரிக்க, அது வின்சென்ட் அசோகன் மரணம், நரேன் மர்ம மரணங்களின் முடிச்சுகளை அவிழ்க்கிறது. இந்த மரணங்களின் பின்னணியை, அதன் பின்னுள்ள பயங்கரங்களை விஷால் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது மீதி.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here