Home World News பாகிஸ்தான் இடைக்கால பிரதமர்: “ஷாகித் ககான் அப்பாஸி”

பாகிஸ்தான் இடைக்கால பிரதமர்: “ஷாகித் ககான் அப்பாஸி”

22

பாகிஸ்தானில் இடைக்கால பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பனாமா ஊழல் குற்றச்சாட்டை அடுத்து பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஷ் ஷெரிப்பை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் கடந்தவாரம் உத்தரவிட்டது. இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பு நவாஷ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் நவாஷ் ஷெரிப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவர் தற்போது பஞ்சாப் மாகாண முதல்வராக உள்ளதால் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வாகும்வரை, பெட்ரோலியத்துறை அமைச்சரான ஷாகித் ககான் அப்பாஸி தற்போது இடைக்கால பிரதமராக தேர்வுசெய்யப்பட்டதையடுத்து அவர் இன்று பதவியேற்கிறார்.

Related Posts