Home Tamil Breaking News வருமான வரித்துறை சோதனை: ரூ.11 கோடி பறிமுதல்

வருமான வரித்துறை சோதனை: ரூ.11 கோடி பறிமுதல்

28

கர்நாடக அமைச்சர் சிவகுமார் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ.11 கோடி பறிமுதல்:

பெங்களூரில் குஜராத் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்க வைக்க ஏற்பாடு செய்த கர்நாடக அமைச்சர் சிவகுமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 11 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

 இன்று காலை 6 மணி முதல், டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில், டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான 39 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை தொடங்கிய நேரத்தில் அமைச்சர் சிவக்குமார் மாயமானதை அடுத்து, அவர் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள ஈகிள்டன் கோல்ப் ரிசார்ட்டில் உள்ளாரா என அங்கும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஈகிள்டன் கோல்ப் ரிசார்ட்டில் ஒவ்வொரு அறையாக சோதனை நடத்திய அதிகாரிகள், அங்கிருந்த சிவக்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனிடையே, டெல்லியில் உள்ள அமைச்சர் சிவக்குமார் வீட்டில் நடத்திய வருமான வரித்துறை சோதனையில், 11 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.