Home Tamil Cinema News ‘விஜய் 59’ பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் நாள் அறிவிப்பு

‘விஜய் 59’ பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் நாள் அறிவிப்பு

127

Vijay 59 Stills 6

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்து வருகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.

தமிழ் திரையுலகத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அதிகாரப்பூர்வமான தலைப்பை வெளியிடவுள்ளனர். இதை இப்படத்தின் இயக்குனர் அட்லி வருகிற 26-ம்தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார். இது இளையதளபதி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.