Home Tamil Cinema News மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 கோடி ரூபாய் உதவி வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 கோடி ரூபாய் உதவி வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்

106

raghava_lawrence

நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் மருத்துவ சாமான்கள். உணவு பொருட்கள் மற்றும் ஆடைகள் அளித்து உதவி புரிந்து உள்ளார்.

நடிகர் நடிகைகள் மத்தியில் எந்த விளம்பரமும் இல்லாமல் உதவி செய்து வருகிறார். தன்னுடன் பல இளைஞர்களையும் இணைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக தேவையான பொருட்களை வழங்கிவருகிறார்.

பல இளைஞர்கள் தாமாக முன்வந்து அரசினை எதிர்பார்க்காமல் மக்களுக்காக சேவை செய்து வருகின்றனர். இதேபோல் மக்கள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் நினைவாக நூறு இளைஞர்க்கு தலா ஒரு இலட்சம் வீதம் கொடுத்து உதவி புரிந்து உள்ளார். ராகவா லாரன்ஸ் ஊனமுற்ற இளைஞர்கள் மற்றும் சமுதயத்தில் கீழ்நிலையில் உள்ளோர்க்கு பல உதவிகள் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த விளம்பரத்தையும் எதிர்பார்க்காமல் தாமாக முன்வந்து சேவை செய்யும் இவர்போன்ற நல்ல உள்ளங்கள் என்றுமே பாராட்டுக்குரியவர்கள்தான்.