Home Tamil Movie Reviews 24 – விமர்சனம்

24 – விமர்சனம்

638
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

நடிகர் சூர்யாவின் 2டி படத்தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கும் ”24 ” படத்தில் சூர்யாவுக்கு சைன்டிஸ் அப்பா, வாட்ச் மெக்கானிக் மகன், வில்லன் சகோதரர் ‘கம் ‘பெரியப்பா… என மூன்று கேரக்டர்கள், எண்ணற்ற கெட்-அப்புகளில் வந்து கலக்குகிறார். காலத்தை கடந்து செல்லும் கால இயந்திரம் கதைக்களத்தை கொண்டு தமிழில் இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் சூர்யா முதன் முறையாக ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் 24.

3.3
இயக்கம்: விக்ரம் கே குமார்
ஒளிப்பதிவு: எஸ் திருநாவுக்கரசு
இசை: ஏ ஆர் ரஹ்மான்
தயாரிப்பு: சூர்யா (2டி எண்டர்டைன்மென்ட்)
நடிகர்கள்: சூர்யா, சமந்தா, நித்யா மேனன், சத்யன், அப்புகுட்டி, சார்லி, அஜய்

நடிகர் சூர்யாவின் 2டி படத்தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கும் ”24 ” படத்தில் சூர்யாவுக்கு சைன்டிஸ் அப்பா, வாட்ச் மெக்கானிக் மகன், வில்லன் சகோதரர் ‘கம் ‘பெரியப்பா… என மூன்று கேரக்டர்கள், எண்ணற்ற கெட்-அப்புகளில் வந்து கலக்குகிறார். காலத்தை கடந்து செல்லும் கால இயந்திரம் கதைக்களத்தை கொண்டு தமிழில் இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் சூர்யா முதன் முறையாக ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் 24.

24-the-movie-stills-6

கதைப்படி, 90களில் இரட்டை சகோதர்களான தம்பி சூர்யா(சேதுராமன்) தனது ஆராய்ச்சியான Project24 என்ற வாட்சை கண்டுபிடிக்கிறார். அதை அண்ணன் சூர்யா(ஆத்ரேயா) தனக்கு சொந்தமாக்க முயற்சி செய்ய தனது தம்பி சூர்யாவையும், அவருடய மனைவி நித்யா மேனனயும் கொலை செய்கிறார்.

ஒரு கட்டத்தில் ஒரு விபத்தில் தம்பி சூர்யாவின் குழந்தையையும், அவர் அடைய நினைத்த project24 யும் தவறவிட்டு கோமாவுக்கு செல்கிறார் ஆத்ரேயா. பின்னர் 26 வருடம் கழித்து நிகழ்காலத்தில் அவர் அடைய நினைத்த project24ஐ அடைந்தாரா, மகன் சூர்யா தனது பெரியப்பாவை பழி வாங்கினாரா, என்பதை பல ட்விஷ்டுகளுடன் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விக்ரம்.கே.குமார்.

Suriya-24-Movie-Teaser-HD-Stills-Photos-Images-8

சூர்யா, டாக்டர் சேதுராமன் எனும் சைன்டிஸ் அப்பாவாக, வாட்ச் மெக்கானிக் மணியாக மகனாக, வில்லன் சகோதரர் ‘கம் ‘பெரியப்பா ஆத்ரேயாவாக வருகிறார். இந்த மூன்று கேரக்டர்களில் முன்னணியில் இருப்பது வில்லன்’ கம் ‘பெரியப்பா தான். சூர்யா வில்லனாக வரும் ஆத்ரேயா கதாபாத்திரத்தில் ஆங்காங்கே சற்று பயத்தை ஏற்படுத்துகிறார்.

இளமை காலத்தில் வரும் போதும் சரி வயதான காலத்தில் வீல் சேரில் வரும் போதும் தனது கதாபாத்திருத்திற்கு பக்காவாக பொருந்தியிருக்கிறார். இந்த உலகத்திலயே ஒரே ஆள இரண்டு முறை கொலை செய்த முதல் ஆள் நான் தான்.

surya-samantha-24-movie-still

எனும் கொக்கரிப்பில் ஆகட்டும், சையின்டிஸ் டாக்டர் வீட்டு வாட்ச்மேனைப் பார்த்து ‘இந்த முறை உன்னை கொல்லாமல் விட்டதும் நல்லது தான்… ‘எனும் நக்கல், நையாண்டியில் ஆகட்டும் சகலத்திலும், புகுந்து விளையாடியிருக்கிறார் சூர்யா.

சமந்தாவிற்கும், நித்யா மேனனுக்கும் சொல்லும் அளவிற்கு கதாபாத்திரத்திரம் இல்லையென்றாலும் தங்களுடைய பங்கை சரியாக செய்துள்ளனர்.
குறிப்பாக சமந்தா அழகு பதுமையாக காட்சியளிக்கிறார்.

வேல் படத்திற்கு பிறகு சரண்யா பொன்வண்ணன் அம்மாவாக இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்திருக்கிறார்.ஒரு கலகலப்பான அம்மாவாகவும் சரி, சூர்யா தன்னுடைய மகன் இல்லை என்பதை சொல்லும் போதும் உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சரண்யா பொன்வண்ணன்.

24-movie

சத்யன், அப்புகுட்டி, சார்லி இவர்கள் படத்தில் அவ்வப்போது வந்து சென்றாலும் தங்களுடைய பங்குக்கு கலகலப்பூட்டுகின்றனர். குறிப்பாக அஜய்(மித்ரன்) ஆத்ரேயாவுடன் வரும் போது அவரும் சேர்ந்து மிரட்டுகிறார்.

எஸ்.திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவு, கண்களில் ஒற்றிக் கொள்ளும் ஓவியப் பதிவு! படத்தை படு பிரமாண்டமாக காட்டுவது இவரது ஒவியப்பதிவும், சி.ஜி வேலைப்பாடுகளும் தான். அதிலும் சூர்யா – சமந்தா, சம்பந்தப்பட்ட அந்த ஆரம்ப காட்சிகளில் மழை துளிகளை அப்படியே பாதியில் பிரீஸ் செய்வது போன்ற காட்சிகள் மிரட்டல். ஏ ஆர் .ரஹ்மானின் இசையில், ‘ஆளப்பிறந்தவன் ஆராரோ…’, ‘மாயமில்லை மந்திரமில்லை….’, ‘அரசியே அடிமையே அழகியே…’ உள்ளிட்ட பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசை அருமை.

மொத்தத்தில் ’24’ – சூர்யாவின் புதிய முயற்சிக்கு குடும்பத்தோடு சென்று பார்க்கலாம்.