Home Tamil Breaking News ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ்: ரயில்வே அமைச்சகம்

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ்: ரயில்வே அமைச்சகம்

75
SHARE

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள 12.30 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.

கடந்த ஆண்டு 78 நாட்கள் உற்பத்தி சார்ந்த போனசாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரெயில்வே ஊழியர்களுக்கான போனஸ் வழங்குவது தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. அப்போது ரெயில்வே ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியிருப்பதாவது:

அரசிதழ் பதிவு பெறாதா, தகுதி உள்ள அனைத்து ரெயில்வே ஊழியர்களுக்கும் இந்த ஆண்டு 78 நாட்கள் சம்பள் போனசாக வழங்கப்படும். போனஸ் தொகை கால தாமதமின்றி உடனடியாக வழங்கப்படும். இதன் மூலம் இதன்மூலம், 12.3 லட்சம் ரெயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here