Home Tamil Breaking News நாடு முழுவதும் இன்று முதல் 93 லட்சம் லாரிகள் ஸ்டிரைக்!

நாடு முழுவதும் இன்று முதல் 93 லட்சம் லாரிகள் ஸ்டிரைக்!

68
SHARE

சென்னை : லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தம் இன்று தொடங்குகிறது. சுமார் 93 -லட்சம் லாரிகள் நிறுத்தப்படுவதால் பட்டாசு, உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சரக்கு போக்குவரத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

புதிய லாரிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு, டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 9, 10 தேதிகளில் லாரிகளை இயக்காமல் 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் லாரி உரிமையாளர்களின் சங்கங்கள் கூட்டாக அறிவித்தன. இதற்கு தமிழகத்தில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் ஆடை, உணவுப் பொருட்கள், பட்டாசு உள்ளிட்டவற்றை கொண்டுசெல்வது பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 93 லட்சம் லாரிகள் ஓடாது. சரக்குகள் கொண்டு செல்வதில் பாதிப்பு ஏற்படும். இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here