Home Tamil Breaking News ரிசர்வ் வங்கி: பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளில் 99 விழுக்காடு திரும்ப வந்துவிட்டன

ரிசர்வ் வங்கி: பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளில் 99 விழுக்காடு திரும்ப வந்துவிட்டன

33

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டவற்றில், 99 விழுக்காடு ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டவற்றில், 8 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்புள்ள 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் திரும்ப வரவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் வரையிலான நிலவரப்படி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகளின் இருப்பில் 50 சதவீதத்தைவிட சற்று அதிகமாக இருப்பதாகவும் ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், 7 ஆயிரத்து 965 கோடி மதிப்புள்ள புதிதாக அச்சடிக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகளை மத்திய வங்கி இதுவரை வினியோகித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகள் புழங்கும் வழக்கம் பொதுமக்களிடம் 20 புள்ளி 2 விழுக்காடு குறைந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here