Home Tamil Cinema News நானும் மதச்சகிப்பின்மையால் பாதிக்கப்பட்டேன் – ஏ.ஆர்.ரஹ்மான்!

நானும் மதச்சகிப்பின்மையால் பாதிக்கப்பட்டேன் – ஏ.ஆர்.ரஹ்மான்!

161

Rahman-Aamir

அமீர்கான் டெல்லியில் சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், நாட்டில் சகிப்புத் தன்மை இல்லை இதன் காரணமாக தினமும் செய்தித் தாள்களை திறக்கவே பயமாக இருக்கிறது இந்தியாவை விட்டு நாம் வெளியேறி விட்டால் என்ன என்று தன் மனைவி கேட்டார். அனால் எனக்கு அது போன்ற என்னம் எதுவும் இல்லை என்றும் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமூக ஊடகங்கள் இடனை முக்கிய செய்தியாக வெளியிட்டுவரும் இந்நிலையில் அமீர்கான் சொன்ன இந்தக் கருத்தை இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மானும் ஆமோதித்துள்ளார். கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஏ ஆர் ரஹ்மான், கடந்த சில மாதங்களுக்கு முன் நான் ஈரானிய திரைப்படமான ‘முகம்மது மெஸேஞ்சர் ஆப் காட்’ என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததற்காக எனக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பால் பத்வா விதிக்கப்பட்டது.

இது பொன்ற பல சம்பவங்களின் மூலம் மதசகிப்பின்மையை நானும் எதிர்கொள்ள நேர்ந்தது என்று ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Posts