Home Tamil Cinema News வடிவேலு ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல்..

வடிவேலு ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல்..

21

நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு தற்போது விஜய் நடித்துள்ள மெர்சலில் களம் இறங்கியுள்ளார்.

இப்படத்தில் கண்டிப்பாக வடிவேலுவின் காமெடி காட்சிகள் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில், காமெடி நடிகர் வடிவேலுவில் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படமான இம்சை அரசன் 23-ம் புலிகேசி, படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் தொடங்கியது.

இதற்காக பிரமாண்ட செட் அமைக்கும் பணிகளெல்லாம் கூட நடந்து வந்தது, இதனால், வடிவேலுவின் ரசிகர்கள் செம்ம குஷியில் இருந்தனர்.

ஆனால், சமீபத்தில் நமக்கு கிடைத்த தகவலின்படி இந்த படத்தின் படப்பிடிப்பு நின்றுவிட்டதாகவும், பிறகு எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை என்றும் தகவல்கள் வந்துள்ளது. படக்குழு தான் இதற்க்கு தெளிவான விளக்கம் தரவேண்டும்.