Home Tamil Breaking News ஓட்டுனர் உரிமம் பெற ஆதார் எண் கட்டாயம்

ஓட்டுனர் உரிமம் பெற ஆதார் எண் கட்டாயம்

44

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் புதிதாக ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு அல்லது ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பதற்கு ஆதார் எண் அவசியம் குறிப்பிடப்பட வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளது.

தனிநபர் அடையாளம் மற்றும் முகவரிக்கான முக்கிய ஆவணமாக ஆதார் எடுத்துக் கொள்ளப்படும் எனவும், இதற்கான புதிய விதிகள் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுனர் உரிமத்தை ஆதார் எண்ணுடன் இணைக்க உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று கூறி உள்ள நிலையில் சாலை போக்குவரத்து அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நபர் பெயரில் பல ஓட்டுனர் உரிமங்கள் இருப்பதை தடுப்பதற்காகவே மத்திய அரசு இந்த புதிய முறையை கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.

போக்குவரத்து விதிகளை மீறுவோர் சிலர், போலியான அடையாள ஆவணங்களை கொடுத்து தப்பித்து விடுகின்றனர். பிறகு புதிய பெயரில், வெவ்வேறு மாநிலங்களின் மண்டல அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் பெற்றுக் கொள்கின்றனர். இது போன்ற முறைகேடுகளை தடுப்பதற்காகவும், ஒருவருக்கு ஒரு ஓட்டுனர் உரிமம் மட்டுமே என்ற நிலையை ஏற்படுத்துவதற்காகவும் ஆதாரை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here