Home Tamil Cinema News சன்னி லியோனோடு நடிக்க விரும்பும் அமீர் கான்

சன்னி லியோனோடு நடிக்க விரும்பும் அமீர் கான்

130

sunny-leone

பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஒரு பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு சில நாட்களுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டியில், கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் அனைவரையும் ஆச்சர்யப்படவைத்தது. அதில் அவரிடம் ஆபாசமாக கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு தயக்கம் எதுவும் இல்லாமல் பதில் அளித்திருந்தார்.

பேட்டி எடுத்தவர் இரட்டை அர்த்த கேள்விகளை கேட்டதற்காக பாலிவுட் சினிமா விரும்பிகள் சிலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். நீலப்பட நடிகையான உங்களோடு, பாலிவுட் நடிகர் அமீர் கான் நடிப்பார் என நினைக்கிறீர்களா! என்ற கேள்விக்கு, கண்டிப்பாக இல்லை, ஆனால் அவரோடு நடிக்க நான் மிகவும் ஆவலாக உள்ளேன் எனறு அந்த பேட்டியில் சன்னி தெரிவித்திருந்தார்.

இந்த செய்தியை கேள்விப்பட்ட அமீர் கான், சன்னி லியோனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிலில் அமிர் கான், சன்னி லியோனுடன் சேர்ந்து நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை அவருடன் நடிக்கும் தருணம் அமைந்தால் மகிழ்ச்சியே என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here