Home Tamil Cinema News பாலிவுட்டின் பிரபல நடிகரான அமீர்கானுக்கு ஏற்பட்ட அச்சம்

பாலிவுட்டின் பிரபல நடிகரான அமீர்கானுக்கு ஏற்பட்ட அச்சம்

106

bollywood-aamir-khan-

பாலிவுட்டின் பிரபல நடிகரான அமீர்கான், தற்போது நாட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு இந்தியாவில் மத சகிப்புத்தன்மை அதிகரித்துள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொண்ட நடிகர் அமீர்கான், கடந்த எட்டு மாதங்களாக நாட்டில் நிகழும் பல்வேறு சம்பவங்கள் இந்தியாவின் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் நாட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு தனது மனைவி கிரன்ராவ், அச்சமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் திரையுலகினர் தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பி அளிப்பது, தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தும் வழிகளில் ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார். விருதுகளை திருப்பி கொடுப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று அமீர்கான் தெரிவித்துள்ளார்.