Home Tamil Movie Reviews ஆறாது சினம் – விமர்சனம்

ஆறாது சினம் – விமர்சனம்

460
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

படம் முழுவதும் அருள்நிதி குடித்துக்கொண்டே இருந்தாலும், அந்த குடியால் அவர் வில்லனை தவறவிட்டு, அந்த குடியை விடும் காட்சிகள் அருமை. மேலும், அருள்நிதி வில்லன் குறித்து சேகரிக்கும் ஆதாரம் அதை வைத்து கண்டுப்பிடிப்பது ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வரவைக்கும்.

மொத்தத்தில் ஆறாது சினம் - ரசிகர்களுக்கு ஏற்ற சினம்

3.5
இயக்கம்: அறிவழகன்
ஒளிப்பதிவு: அரவிந்த் சிங்
இசை: எஸ். தமன்
தயாரிப்பு: என் ராமசாமி
நடிகர்கள்: அருள்நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, ராதாரவி, அனுபமா குமார், துளசி, ஆர் என் ஆர் மனோகர், ரோபா சங்கர், சார்லி, ரமேஷ் திலக்

மௌனகுரு, டிமாண்டி காலனி என வெற்றிப் படங்களில் நடித்து வரும் அருள்நிதி, ஈரம், வல்லினம் என தரமான படங்களை இயக்கிய அறிவழகன் இருவரின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் “ஆறாது சினம்”.

Aarathu-Sinam

அருள்நிதி படத்தின் ஆரம்பத்திலேயே மிரட்டல் என்கவுண்டருடன் அறிமுகமாகிறார். ஆனால், ஒரு சில காரணங்களால் அந்த என்கவுண்டர் நின்று போக, வில்லனால் அவர் குடும்பத்தை இழக்கின்றார். இதன் பிறகு வாழ்க்கையே குடியுடன் மட்டும் தான் வாழ்கின்றார்.

இந்நிலையில் இவர் வாழ்க்கையில் மீண்டும் ஒரு கடமை வர, அரை மனதுடன் அந்த வழக்கை விசாரிக்க சம்மதிக்கின்றார். தொடர்ந்து தேனி, சிவகங்கை பகுதிகளில் ஒரு சில கொலைகள் நடக்கின்றது, யார் இந்த கொலைகளை செய்கிறார்கள் என அருள்நிதி தேடுகிறார்.

ஒரு கட்டத்தில் இந்த கொலைகள் தொடர்ந்து நடக்க, அவர் ஒரு சீரியல் கில்லர் என தெரிய வருகின்றது. அரை மனதுடன் உள்ளே வரும் அருள்நிதிக்கு விஷயம் அறிந்து சீரியஸ் ஆகின்றார். சின்ன சின்ன தடயங்களாக தேடி கிளைமேக்ஸில் வில்லனை நெருங்கும் தருணத்தில் அருள்நிதிக்கு ஒரு செக் வர, யார் அந்த கொலைகளை செய்பவர்? எதற்காக இப்படியெல்லாம் செய்கிறார்? படத்தின் மீதிக்கதை.

AARATHU-SINAM-1

கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தை இயக்கியவர் ஜீத்து ஜோசப். இவர் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளிவந்த மெமரீஸ் படத்தின் ரீமேக் தான் இந்த ஆறாது சினம்.

அருள்நிதியின் தனக்கு என்ன வரும் என்பதை மிக தெளிவாக தெரிந்து வைத்து அதற்கு ஏற்றார் போல் நடித்துள்ளார். 6 அடி உயரம் போலிஸிற்கு உண்டான அத்தனை கம்பீரமும் இருக்க, படம் முழுவதும் போதை, அழுக்கு சட்டை என்றே அருள்நிதி உலா வருகின்றார். இவர் படம் என்றாலே இனி நம்பி போகலாம் என சொல்லும் அளவிற்கு மீண்டும் நிரூபித்து விட்டார்.

எப்போதும் போதையில் இருந்தாலும், தன் விசாரணையில் எந்த ஒரு இடத்திலும் கோட்டை விடாமல் கவனமாக இருக்கின்றார். அதிலும், வில்லன் தொடர் கொலைகளை வைத்தே, இவர் இதன் தாக்கத்தால் தான் இந்த மாதிரி கொலை செய்கிறான் என்று கண்டுப்பிடிக்கும் இடமெல்லாம் அருமை.

aarathu-sinam-trailer

அருள்நிதியை தவிர வேறு யாருக்கும் பெரிதாக நடிக்கும் வாய்ப்பு இல்லை. ஏனெனில் படத்தின் மொத்த பலமும் திரைக்கதை தான், அதில் பலரும் வந்து போகிறார்கள், ஆனால், அருள்நிதியே தாங்கி செல்கின்றார். உயர் அதிகாரியாக வரும் ராதாரவி, உதவியாளராக வரும் சார்லி என இருவரும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் திரைக்கதை நகர்வுக்கு பலம் சேர்க்கின்றனர்.

ரோபோ ஷங்கர் காமெடியாக 10 வசனம் பேசினால் 2 வசனம் மட்டுமே சிரிப்பு வருகின்றது. படத்தின் இரண்டாம் ஹீரோ கண்டிப்பாக தமனின் பின்னணி இசை தான், பல காட்சிகளில் தன் இசையால் ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைக்கின்றார். அதிலும், கிளைமேக்ஸில் வில்லன் பற்றிய தொகுப்புகளை அருள்நிதி விவரிக்கும் இடத்தில் பின்னணி இசை நம்மையும் படத்திற்குள் அழைத்து செல்கின்றது.

aarathu-sinam-trailer r

இந்த மாதிரியான க்ரைம் திரில்லர் கதைகளுக்கே மிக முக்கியத்துவம், வில்லனின் முகத்தை காட்டாமல், ஹீரோ வீட்டில் வேலைப்பார்க்கும் வேலைக்காரன் வரை சந்தேக கண்ணோடு நம்மை பார்க்க வைப்பது தான். படத்தின் இறுதிவரை யார் மீதும் சந்தேகம் எழவில்லை, இருந்தாலும் படத்தின் சுவாரசியம் குறையவில்லை.

என்ன தான் கதாபாத்திரம் குடும்பத்தை இழந்து நின்றாலும், அருள்நிதி சட்டை கூட மாற்றாமல் சுற்றுவது கொஞ்சம் ஓவர். முதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகரும் காட்சியமைப்புகள்.

தமனின் பின்னணி இசை, அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு, ஒரு க்ரைம் த்ரில்லருக்கு என்ன தேவையோ அதை நேர்த்தியாக செய்திருக்கிறார்.

படம் முழுவதும் அருள்நிதி குடித்துக்கொண்டே இருந்தாலும், அந்த குடியால் அவர் வில்லனை தவறவிட்டு, அந்த குடியை விடும் காட்சிகள் அருமை. மேலும், அருள்நிதி வில்லன் குறித்து சேகரிக்கும் ஆதாரம் அதை வைத்து கண்டுப்பிடிப்பது ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வரவைக்கும்.

மொத்தத்தில் ஆறாது சினம் – ரசிகர்களுக்கு ஏற்ற சினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here