Home Tamil Cinema News சென்னை மழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன் – கவலைப்படும் அமிதாப் பச்சன்

சென்னை மழை வெள்ளத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன் – கவலைப்படும் அமிதாப் பச்சன்

117

amitabh-and-abhishek

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் நேற்று முன்தினம் சென்னையில் மோதின.

இந்த போட்டியை பார்ப்பதற்காக சென்னை அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், பிரபல இந்தி நடிகருமான அபிஷேக் பச்சன் சென்னை வந்திருந்தார். அப்போது அவர் மழை வெள்ளத்தில் சிக்கினார். எனினும் பத்திரமாக மும்பை திரும்பிய அவர் சென்னை மழை-வெள்ளம் குறித்து ‘சென்னை வெள்ளம்’ என்ற தலைப்பில் தனது ‘டுவிட்டர்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில்,

‘சென்னை வெள்ளத்தில் சிக்கிய என்னை பாதுகாத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நான் பாதுகாப்பாக இருக்கிறேன். மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள சென்னை மக்களை நினைக்கவும், அவர்களுக்காக பிரார்த்திக்கவும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று தகவல் வெளியிட்டுள்ள அமிதாப் பச்சன், வெள்ளநீரில் சென்னை மூழ்கிக் கிடக்கின்றது. அனைவரின் பாதுகாப்புக்காகவும், அங்கு இயல்புநிலை திரும்பவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். சென்னை மக்களுக்கு உரிய காலத்தில் கிடைத்துவரும் உதவிகள் மகிழ்ச்சியளிக்கும் விதமாக உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும், நடிகையுமான டியா மிர்ஸாவும், ’வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மீள்வதற்கு உதவிபுரியும் அனைவருக்கும் தலை வணங்குகிறேன். இதே மனிதாபிமானம் மேம்பாடு தொடர்பான நடவடிக்கைகளிலும் மிளிர வேண்டும் என விரும்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர், அபிஷேக் பச்சன், பர்ஹான் அக்தர், நடிகை ரவீணா டான்டன், பரினீட்டி சோப்ரா உள்ளிட்ட இதர பாலிவுட் பிரபலங்களும் சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதம் தொடர்பாக கவலை தெரிவித்துள்ளனர்.