Home Tamil Cinema News சிம்புவின் அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி அறிவிப்பு

148

achcham-yenbathu-madamaiyada

சிம்பு நடிப்பில் உருவாகிவருகின்ற ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தையும் விரைவில் வெளியிட தயாராகி வருகின்றனர். கவுதம்மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தின் சிங்கிள் பாடல் மற்றும் டீசர், டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தின் மொத்த பாடல்களையும் வருகிற ஜுன் 17-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். இதையடுத்து ஜூலை 15-ந் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இதனால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.