அனுஷ்கா-த்ரிஷாவுக்கு ஜோடியா நடிப்பது தான் பவர் ஸ்டாரின் லட்சியமாம்!

அனுஷ்கா-த்ரிஷாவுக்கு ஜோடியா நடிப்பது தான் பவர் ஸ்டாரின் லட்சியமாம்!

83

dr-srinivasan

பவர்ஸ்டார் சீனிவாசன் தற்போது நடிக்கும் படம் ‘அட்ரா மச்சான் விசிலு’. இந்தப்படத்தில் சிவா, நைனா சர்வார் ஆகியோரும் நடிக்கின்றனர். இதனை திரைவண்ணன் இயக்கியுள்ளார். இந்தப்படம் ஜூலை 7-ம் தேதி வெளியாகிறது. படம்பற்றி பவர் ஸ்டார் சீனிவாசன் கூறுகையில் இந்தப் படத்தில் நடிகராக, அதாவது சூப்பர் ஸ்டாராக நடித்துள்ளேன்.

எனது ரசிகராக சிவா நடித்துள்ளார். எங்கள் இருவருக்குமான காம்பினேஷன் நன்றாக இருக்கும். படத்தில் எனது கேரக்டர் வில்லத்தனம் கலந்தது. சண்டைக் காட்சி இல்லை. ஆனால், வசனத்தில் மோதல் இருக்கும். இது காமெடி படம் என்பதால் எனக்கு நிறைய பன்ச் டயலாக் உண்டு.

பட ரிலீசுக்கு பிறகு குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அதைத்தான் பேசுவார்கள். காமெடி டயலாக் எழுத தனி டீம் வைத்திருக்கிறீர்களா என்கிறார்கள். அந்த அளவுக்கு நான் வளரவில்லை. ஆனால் அதற்கான அவசியம் விரைவில் வரும் என நம்புகிறேன்.

எனது லட்சியம், அனுஷ்கா மற்றும் த்ரிஷாவுடன் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதுதான்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கோபி கூட எனது அடுத்தப்படத்துக்கு அவர்களிடம் கால்ஷீட் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY