பல்கேரிய பைக் சாகச வீரரை அசர வைத்த அஜித்

பல்கேரிய பைக் சாகச வீரரை அசர வைத்த அஜித்

82

ajith-stuns-bulgaria-bike-racer

நடிகர் அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் தல 57 படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித்தின் ஸ்டண்ட் காட்சிகளுக்கு டூப் போட்ட பல்கேரிய பைக் வீரரும், சாகச கலைஞருமான ஜோரியன் பொனமரெப் அஜித்தை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். ஜோரியன் தனது முகநூல் வலைத்தளத்தில் பைக் வீலிங் செய்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தை எடுத்தது அஜித் தானாம். அவர் பைக் வீலிங் செய்தபோது அஜித் அந்த புகைப்படத்தை எடுத்து, இவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். இதைப் பார்த்து வியந்துபோன ஜோரியன், அஜித் சிறந்த மனிதர். என்னுடைய பைக்கில் பயங்கரமான வித்தைகளை செய்துள்ளார். அவருடைய எளிமை என்னை மிகவும் கவர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.

அஜித் ஒரு பைக் பிரியர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் சொந்தமாக பி.எம்.டபிள்யூ பைக் ஒன்றை வைத்துள்ளார். உலகின் எந்த விலையுயர்ந்த பைக்கையும் ஓட்டிப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY