Home Tamil Cinema News ஆர்யா தனது உடல் எடையை 18 கிலோ அதிகரித்தார்

ஆர்யா தனது உடல் எடையை 18 கிலோ அதிகரித்தார்

341

arya gym

ஆர்யா தற்போது ‘மஞ்சப்பை’ படத்தை இயக்கிய ராகவ் இயகத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதில், ஆர்யா பழங்குடியை சேர்ந்த மலை சாதி இளைஞராக நடிக்கிறார்.

இதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையை 18 கிலோ அதிகரித்து இருக்கிறார். முன்பு அவர் உடல் எடை 70 கிலோவாக இருந்தது. இப்போது, அவருடைய எடை 88 கிலோ. படத்தில், ஆர்யா அதிரடி கதாநாயகனுக்குரிய பல சாகசங்களை செய்கிறார்.

இதற்காகவே அவர் தனது உடல் எடையை கூட்டியிருக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக கேத்தரின் தெரசா நடிக்கிறார். கொடைக்கானலில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் அரங்கு அமைத்து, படத்தின் பெரும்பகுதி காட்சிகளை படமாக்கியிருக்கிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here