Home Tamil Cinema News ராட்சஷனாக நடிக்கும் ஜெய்!

ராட்சஷனாக நடிக்கும் ஜெய்!

94

Jai-in-Valiyavan

நடிகர் ஜெய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘புகழ்’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இப்படத்தை தொடர்ந்து ஜெய் நடிப்பில் ‘தமிழ் செல்வியும் தனியார் அஞ்சலும்’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

அதைத் தொடர்ந்து ‘சென்னை 600 028’ இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளார். இந்த நிலையில், ‘முண்டாசுப்பட்டி’ இயக்குனர் ராம்குமார் இயக்கும் புதிய படத்திலும் ஜெய் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு ‘ராட்சஷன்’ என வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தை திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் மூலம் சி.வி.குமார் தயாரிக்கவிருக்கிறார். ஜெய் தற்போது தனது அடுத்து ஒவ்வொரு படத்தை வெற்றிப்படமாக கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார். இந்தப்படம் அவருக்கு அந்த வெற்றியைத் தேடித் தரும் என எதிர்பார்க்கலம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here