Home Tamil Cinema News ஜீவா நடிப்பில் உருவாகும் திகில் படம்

ஜீவா நடிப்பில் உருவாகும் திகில் படம்

97

19fr_Jeeva13_jpg_68991g

ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா நடித்த போக்கிரி ராஜா படம் நாளை வெளியாக இருக்கிறது. இதில் ஜீவாவுடன் சிபிராஜ் மற்றும் ஹன்சிகா நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தையடுத்து ஜீவா-நயன்தாரா ஜோடியில் உருவாகியுள்ள ‘திருநாள்’ படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஹரி இயக்கத்தில் ஜீவா நடித்துவருகிறார்.

பெயரிடப்படாத இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பழனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா ஆகியோர் ஜீவாவுடன் நடித்து வருகிறார்கள். இப்படத்தை திகில் படமாக உருவாக்கி வருகிறார்கள். விஷால் சந்திரசேகர் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here