Home Tamil Cinema News உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நடிகர் மாதவன்!

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நடிகர் மாதவன்!

83

madhavan-614x324

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு  இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

இருப்பினும் அவர் நல்ல கதையம்சமுள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் மலையாளத்தில் வெளிவந்த ‘சார்லி’ படத்தின் ரீமேக்கில் நடிக்க தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், ‘களவாணி’, ‘வாகை சூடவா’ படங்களை இயக்கிய சற்குணம் இயக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இப்படத்திற்காக மாதவன் தற்போது தனது உடல் எடையை குறைத்துக் கொண்டு வருகிறாராம்.

இந்தப் படத்தில் மாதவன் சீன தற்காப்பு கலை பயின்றவராக நடிக்கிறாராம். இதற்காக சீன தற்காப்பு கலையை பயின்று வருகிறாராம். அதோடு, ஜிம்மில் உடற்பயிற்சியும் மேற்கொண்டு உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம்.