நடிகை சமந்தா – நாகசைதன்யா நிச்சயதார்த்தம் முடிந்தது, டிசம்பரில் திருமணம்

நடிகை சமந்தா – நாகசைதன்யா நிச்சயதார்த்தம் முடிந்தது, டிசம்பரில் திருமணம்

18

நாகசைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் நேற்று மாலை ஐதரபாத் நட்சத்திர ஓட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள், மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இவர்களின் திருமணம் இந்த ஆண்டு இறுதியில் அதாவது டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. நடிகை சமந்தாவும் நாகர்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் முதலில் மறுத்தாலும் பின்பு பச்சை கொடி காட்டினர்.

இந்த நிலையில் இந்த ஜோடிக்கு நேற்று மாலை நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சமந்தா தமிழில் விஜய், விஷால், சிவகார்த்திகேயன், பகத்பாசில் ஆகியோருடன் படம் நடித்து வருகிறார்.

இந்த படங்கள் டிசம்பர் மாதத்திற்குள் முடியுமாறு கால்ஷீட் கொடுத்துள்ளாராம். திருமணத்திற்கு பிறகு சமந்தா நடிப்பதை தவிர்க்கவே படங்களை சீக்கிரம் முடிக்கப்பார்க்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY