Home Tamil Cinema News வெள்ள நிவாரணத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் நிதியுதவி

வெள்ள நிவாரணத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் நிதியுதவி

111

rajinikanth

சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து பலத்த சேதத்தை ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் கடலூர் பகுதிகளில் உள்ள மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ள நிவாரண பணிகளில் அரசு தற்போது முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. அரசின் வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர்கள் பலர் நிதி உதவி வழங்கி வருகிறார்கள். இந்த நிதி அனைத்தும் நடிகர் சங்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிதியை நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர் பொன் வண்ணன், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் திரட்டி வருகிறார்கள். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், பிரபு, விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன், சத்தியராஜ், சிபிராஜ் உள்ளிட்டோர் நிவாரண நிதிகளை வழங்கியுள்ளனர். இந்த நிதி தமிழக அரசின் மூலமாக பயனாளிகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மற்ற நடிகர்களை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்ரீராகவேந்திர அறக்கட்டளை மூலம் வெள்ள நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரஜினிகாந்த் எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் நிவாரண நிதி பெயரிலான காசோலையை சேர்த்து அனுப்பியுள்ளார்.

முன்னதாக நடிகர் சங்கம் வெளியிட்டிருந்த செய்தியில் மழை வெள்ள பாதிப்பிற்கு அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் நடிகர் சங்கம் ஒன்றும் செய்யாது என விஷால் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.