Home Tamil Cinema News முன்னணி நடிகையுடன் நடிக்கும் நடிகர் சந்தானம்

முன்னணி நடிகையுடன் நடிக்கும் நடிகர் சந்தானம்

135

santhanam

காமெடி நடிகராக இருந்த சந்தானம் தற்போது முழு நேர ஹீரோவாகிவிட்டார். இவர் அடுத்து இயக்குனர் ராம்பாலா படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் முடிந்த கையோடு அறிமுக இயக்குனர் ஒருவர் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். என்னதான் காமெடி நடிகராக இருந்தாலும் தற்போது ஹீரோவாக நடிக்க சந்தானத்திற்கு வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளது.

அந்த அறிமுக இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்தவராம். மேலும், இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாரயாணன் என கூறப்படுகின்றது. இந்தப்படம் காதல் கலந்த காமெடி படமாக வரும் என்று திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகின்றது.

மேலும், இப்படத்திற்கு சந்தானத்திற்கு ஜோடியாக ஒரு முன்னணி நடிகையிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அவரும் சம்மதம் தெரிவிக்கும் நிலையில் தான் உள்ளதாக பேசப்படுகின்றது. இதற்கு மேல் சந்தானம் ஹீரோவுக்கு அடுத்த காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கமாட்டார் என்றுதான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here