Home Tamil Cinema News பிரபல நடிகர் சந்தானத்தின் தந்தை காலமானார்

பிரபல நடிகர் சந்தானத்தின் தந்தை காலமானார்

109

santhanam-s-father-neelamegam

தமிழ் சினிமாவில் கதாநாயகனாவும் அவதாரம் எடுத்து, வெற்றிவாகை சூடி வரும் சந்தானத்தின் நிஜவாழ்க்கையில் தற்போது ஒரு சோக நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

சந்தானத்தின் தந்தை நீலமேகன் இன்று மாலை உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில மாதங்களாகவே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 62.

அவரது தந்தையின் உடல் சந்தானத்தின் சொந்த ஊரான பொழிச்சலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. சந்தானம் தந்தையின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தனர்.