Home Tamil Cinema News ட்விட்டரில் விமர்சகர்களை தாக்கிய உதயநிதி

ட்விட்டரில் விமர்சகர்களை தாக்கிய உதயநிதி

146

gethu_2680612f

உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான கெத்து படம் பொங்கலுக்கு வெளியாகி தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் சமூக வலை தளங்களில் கெத்து படம் பற்றிய விமர்சனங்களை விமர்சகர்கள் பலர் வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் யாரோ ஒரு விமர்சகர் உதயநிதி நடித்த கெத்து படத்தை பற்றி மோசமாக விமர்சனம் செய்துவிட்டார். இதனை பார்த்த உதயநிதி, பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்பவர்களை பற்றி கவலைப்பட மாட்டேன், ரசிகர்களுக்காக மட்டும்தான் படம் எடுக்கிறேன். இதற்கு முன் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை ஒரு விமர்சகர் மோசமாக எழுதியிருந்தார். பின் அந்த படம் வெற்றி என்று தெரிந்ததும், அவருடைய விமர்சனத்தை நீக்கிவிட்டார்.

அப்படி பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்யும் டுபாக்கூர் விமர்சகர்கள் முகத்தில் விடப்படும் குத்துதான் கெத்து படத்தில் பாரில் நடைபெறும் சண்டைக் காட்சியின் முதல் குத்து என்று யாரோ ஒரு விமர்சகரை தாக்கியுள்ளார்.