Home Tamil Cinema News உலக அளவில் ரூ 70 கோடி வசூல் செய்து சாதனை படைத்த மெர்சல்!!

உலக அளவில் ரூ 70 கோடி வசூல் செய்து சாதனை படைத்த மெர்சல்!!

34

சென்னை : நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் பல்வேறு இடையூறுகளை கடந்து நேற்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்பட உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 700 தியேட்டர்களில் மெர்சல் படம் திரையிடப்பட்டது. ஒரே காம்ப்ளக்ஸ் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் திரையிடப்பட்டது அங்கு கூட்டம் அலைமோதியது.

விஜய்யின் முந்தைய படங்களை விட மெர்சல் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் படம் வசூலில் சாதனை படைத்தது. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.22 முதல் ரூ.24 கோடி வரை வசூலித்து இருப்பதாக வினியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மெர்சல் தயாரிப்பு நிறுவனம் 156 கோடி ரூபாய்க்கு திரையரங்கு, ஆடியோ மற்றும் இதர உரிமைகளை விற்பனை செய்துள்ளது. தமிழக திரையரங்கு உரிமைகள் 70 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன.