Home Tamil Cinema News நடிகர் விஜய் சேதுபதி மருத்துவமனையில் அனுமதி

நடிகர் விஜய் சேதுபதி மருத்துவமனையில் அனுமதி

108

sethupathi

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. அதனால் அவர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். அதன் பிறகு பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் தர்மதுரை படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கின்றது. சமீபத்தில் தர்மதுரை படப்பிடிப்பில் விஜய் சேதுபதி வில்லனுடன் மோதும் சண்டைக்காட்சி எடுக்கப்பட்டது.

அந்த சண்டை காட்சி படமாக்கப்பட்டபோது அவர் கண்ணில் பலத்த அடிப்பட்டுள்ளது, இதை தொடர்ந்து அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த பின் மருத்துவர்கள் கூறுகையில் அவர் கண் நரம்பில் பலத்த அடியால் வீக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இச்செய்தி அவருடைய ரசிகர்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.