Home Tamil Cinema News நடிகர் விஜய் சேதுபதி எடுக்கும் ரிஸ்க்!

நடிகர் விஜய் சேதுபதி எடுக்கும் ரிஸ்க்!

120

Soodhu_Kavvum
நடிகர் விஜய் சேதுபதி நடித்த ஆரம்ப கால படங்களில்  இவர் அனைத்து படங்களும் ஹிட் ஆக, பல படங்களில் நடிக்க கமிட் ஆனார். சூது கவ்வும் படத்தில் அவரது வித்தியாசமான நடிப்பு பலரால் பேசப்பட்டது. அவர் எப்போதும் தனித்துவமான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர்.

இருப்பினும் விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கையில் நடுவில் வெளிவந்த ரம்மி, வன்மம், பன்னையாரும் பத்மினியும், புறம்போக்கு ஆகிய படங்கள் தோல்வியை தழுவின, இதனால், கொஞ்சம் கேப் விட்டு நடித்த நடித்த நானும் ரவுடி தான் நல்ல ஹிட் ஆனது.

இந்நிலையில் மீண்டும் இந்த வருடம் விஜய் சேதுபதி நடிப்பில் காதலும் கடந்து போகும், இறைவி, இடம் பொருள் ஏவல், மெல்லிசை, தர்மதுரை, சேதுபதி என பல படங்கள் வரவிருக்கின்றது.

இந்தப்படங்கள் ஹிட் ஆனால் விஜய் சேதுபதி மார்க்கெட் உச்சத்தை தொடும் என்று சினிமா தரப்பில் பேசப்படுகின்றது. அதே சமயம் ஒரே ஆண்டில் இத்தனை படங்களை ரிலிஸ் செய்வது கொஞ்சம் ரிஸ்கும் கூட என அதே சினிமா வட்டாரங்களில் உள்ள சிலர் தெரிவிக்கின்றனர்.