Home Tamil Cinema News நடிகர் சங்க கடனை அடைக்க விஷால் அதிரடி திட்டம்

நடிகர் சங்க கடனை அடைக்க விஷால் அதிரடி திட்டம்

153

THANU_GREETS

நடிகர் சங்கத்தின் கடனை அடைக்கும் விதமாக தற்போது புது முயற்சியாக சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் Cricket போட்டி ஏப்ரல் 10ம் தேதி சென்னையில் நடத்தவுள்ளனர்.

அந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் உட்பட அணைத்து நடிகர்களும் இதில் கலந்துகொள்வார்கள் என விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் சங்க வளாகத்தில் இன்று நடந்த அவன் அவள் பட ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த தகவலை தெரிவித்தார்.

நாசர் தலைமையிலான அணி நடிகர் சங்க பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி மாற்றங்கள் செய்து வருகின்றனர். அந்தவகையில் எஸ்.பி.ஐ சினிமாஸ் வசம் இருந்த நடிகர் சங்க இடத்தை பணம் கொடுத்து மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.