Home Tamil Cinema News காண்டம் குறித்து நடிகர் ‘விஷால்’ விளக்கம்!

காண்டம் குறித்து நடிகர் ‘விஷால்’ விளக்கம்!

244

kathaka

நடிகை விஷால் நடித்து பொங்கலுக்கு வெளிவரவுள்ள படம் ‘கதகளி’. பாண்டிராஜ் ஆக்‌ஷன் ஆக்ஷ்ன் பாணியில் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். கேத்ரின் தெரசா, கருணாஸ், மைம் கோபி, பவன், ராம்தாஸ் நடித்துள்ள இந்தப் படம் பற்றி விஷாலிடம் பேட்டி எடுக்கப்பட்டது, அதில் விஷால் கதகளி படம் குறித்து சூடான விளக்கம் அளித்துள்ளார். அந்த பேட்டி பின்வருமாறு:

திடீரென்று படத்தை முடித்து விட்ட மாதிரி இருக்கிறதே?

திட்டமிட்டு 65 நாளில் படத்தை முடித்து விட்டோம். இயக்குனர் பாண்டிராஜ் என்னிடம் 2 கதைகள் சொன்னார். ‘கதகளி’ கதை பிடித்திருந்தது. ஆரம்பித்து விட்டோம். ‘கதகளி’ என்ற சொல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மூன்றிலும் ஒரே பொருள் தரக்கூடியது. எனவே மூன்று மொழிக்கும் இதே தலைப்புதான். கதகளி ஆட்டத் துக்கும் படத்தின் கதைக்கும் சம்பந்தமில்லை.

டிரைலர் பார்த்தால், பாண்டிராஜ் படம் மாதிரி தெரியவில்லைய

தெரியக்கூடாது என்பதுதான் எங்கள் ஆசை. அவருக்கு இருக்கும் சாப்ட் இயக்குனர் என்பதை உடைக்கவே அவர் இந்த கதை களத்தை தேர்ந்தெடுத்துள்ளார். அவர் நண்பரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் கதை. ஒரு போன் கால் ஒருவனின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப்போடுகிறது என்பது கதை. இடைவேளைக்கு பிறகு கதை முழுக்க இரவில் தான் நடக்கும், ஒரு கொலை. அதை செய்தது யார் என்கிற கேள்வி கடைசி வரை தொடரும். 2 மணி நேரம் சீட்டின் நுனியில் உட்கார வைக்கிற பரபரப்பான திரைக்கதை.

கேத்ரின் தெரசா எப்படி?

‘மெட்ராஸ்’ படத்திலிருந்து முற்றிலும் வேறு மாதிரி இருப்பார். காதல் காட்சிகள் படத்தில் குறைவுதான். என்றாலும் படம் முழுக்க காதல் இருக்கிற மாதிரி ஃபீல் இருக்கும். ஆக்‌ஷன் ஏரியாவுக்கு ஒரு போன் கால் காரணமாக இருக்கிற மாதிரி, காதலுக்கும் ஒரு போன்தான் காரணமாக இருக்கும்.

நடிகர் சங்க கட்டிடத்துக்கான படம் எப்போது துவங்கும்?

விரைவில். நான், கார்த்தி, ஆர்யா, ஜெயம்ரவி, ஜீவா நடிப்பது உறுதி. எங்களை தாண்டி பெரிய நடிகர்களையும் நடிக்க வைக்க முயற்சிப்போம். எல்லோரையும் உள்ளுக்குள் கொண்டு வருகிற அளவிற்கான ஒரு கதையையும் இயக்குனரையும் தேடிக் கொண்டிருக்கிறோம்.

டிரைலரில் இடம்பெறும் ‘காண்டம்’ என்ற வார்த்தை பற்றி நடிகை ராதிகா விமர்சித்துள்ளாரே?

காண்டம் என்பது தவறான வார்த்தையோ, அது தவறான பொருளோ அல்ல. சமூகத்தில் எல்லோரும் பேசுகிற விஷயம். செக்ஸ் கல்வி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அந்த நிலையில் காண்டம் ஏதோ ஆபாச வார்த்தை போன்று நினைப்பது காமெடியாக இருக்கிறது. படத்தின் ஹீரோயின் கதைப்படி பார்மசி படித்துவிட்டு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்கிறவர். அவரிடம் அவரது காதலனான ஹீரோ யதார்த்தமாகவும், கிண்டலாகவும் கேட்கிற கேள்வி. இதில் ஆபாசம் எங்கே இருக்கிறது என்று விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here