Home Tamil Cinema News நடிகை ராதிகாவிற்கு நடிகர் சங்கம் நோட்டிஸ்

நடிகை ராதிகாவிற்கு நடிகர் சங்கம் நோட்டிஸ்

115

Simbu-Radhika-Sarathkumar

நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இணைந்து வெளியிட்டதாக கூறப்படும் ’பீப்’ பாடல் சில தினங்களுக்கு முன்பு இணையதளங்களில் பரவியது. இது தமிழக மக்களிடையேயும், பெண்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிம்பு மற்றும் அனிருத்திற்கு எதிராக தமிழகம் முழுவதிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதே சமயம் நடிகர் சிம்புவுக்கு சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், கோவை மாநகர ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், கோவை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு நடிகர் சங்க தலைவர், நாகரிகமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கிடையில், நடிகை ராதிகா, நடிகர் சங்கம் ஒரு நிலைப்பாட்டிற்கு வரவேண்டும். குளியலறையில் பாடும் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் உங்களில் யாருக்கும் இந்த விஷயம் நிகழும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை தி.நகரில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘பீப்’ பாடலுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்த நடிகை ராதிகாவுக்கு விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here