Home Tamil Cinema News நடிகர்கள் விஷால் ஆர்யாவால் வாக்குசாவடியில் பரபரப்பு

நடிகர்கள் விஷால் ஆர்யாவால் வாக்குசாவடியில் பரபரப்பு

129

Actors Vishal, Arya Created Furore in Voting Booth

நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வள்ளியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்க வந்தனர். அப்போது அவர்கள் வர பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர். உடனடியாக காவல்துறையினர் இரண்டு பேரையும் பாதுகாப்பாக வாக்குச்சாவடி மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, புகைப்படக்காரர்கள் விஷாலையும், ஆர்யாவையும் படம் எடுக்க முயன்றபோது வாக்குசாவடி அதிகாரிகள் தடுத்தனர். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து புகைப்படக்காரர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

விஷால் 59வது வாக்குசாவடியில் வாக்களிக்க சென்ற பொது வரிசையில் அதிகம் மக்கள் நின்றதால் நேராக சென்று வாக்களித்தார், ஆனால் ஆர்யா 51வது வாக்குசவடியில் மக்களோடு மக்களாக நின்று வாக்களித்தார். இதனால் மாகள் சிலர் கடுப்பானாலும் வாக்கு பதிவு செய்த பின் அங்கு கூடி இருந்த மக்கள் ஆர்யா விஷாலுடன் சுயமி எடுத்துக்கொண்டனர்.