Home Tamil Cinema News பட்டாசு வெடித்ததில் காயமடைந்த நடிகை அலியா பட்

பட்டாசு வெடித்ததில் காயமடைந்த நடிகை அலியா பட்

115

alia

பிக் ஸ்டார் என்டெர்டையின்மென்ட் விருது வழங்கும் நிகழ்ச்சியில் அலியா பட்டின் நடனமும் இடம் பெற்றிருந்தது. இந்த விழாவில் அலியா பட் மேடையேறிய போது அந்த இடத்தை வண்ணமயமாக மாற்றும் வகையில் பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்தன. இதில் ஒரு பட்டாசு திடீரென்று பறந்து வந்து அலியாவின் மேல் விழுந்தது.

எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவத்தின் போது அலியா தனது முகத்தை வலது கையால் மூடிக் கொண்டார். இதனால் அவரின் முழங்கை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு முதலுதவி அளித்த பின்னர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை அவசரமாக அவரது வீட்டிற்கு காரில் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அலியா தனது ட்விட்டர் பக்கத்தில் “வாழ்க்கையில் விபத்து ஏற்படாமல் தடுக்க முடியாது எனினும் இதுபோன்ற விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

மொத்தத்தில் என்னுடைய முகம் நன்றாக இருக்கிறது” என்று தெரிவித்து இருக்கிறார். தற்போது அலியா பட்டின் தீவிர ரசிகர்கள் அவரது உடல்நிலை குறித்து மிகுந்த அக்கறையுடன் நலம் விசாரித்து வருகின்றனர்.