Home Tamil Cinema News 37 வயது நடிகை பிபாஷா பாசுவுக்கு மும்பையில் திருமணம் நடந்தது

37 வயது நடிகை பிபாஷா பாசுவுக்கு மும்பையில் திருமணம் நடந்தது

131

Actress Bipasha Basu got Married in Mumbai

பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுக்கும், இந்தி நடிகர் கரண்சிங் குரோவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் ஜோடியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். அதனால் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. அதன்படி, நேற்று முன்தினம் மாலை மும்பையில் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் இருவரது குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் பங்கேற்றனர். அன்றைய தினம் மாலை தெற்கு மும்பை பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில், வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், அபிஷேக்பச்சன், ரன்வீர் கபூர், சஞ்சய் தத், ரித்தேஷ் தேஷ்முக், மாதவன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும், ஐஸ்வர்யாராய், சுஷ்மிதா சென், தபு, தியா மிர்ஷா, ஜெனிலியா உள்ளிட்ட நடிகைகளும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த நிகழ்வில், அவர்களது முன்னிலையில் பிபாஷா பாசு –  கரண்சிங் குரோவர் தம்பதியினர் ‘கேக்’ வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here