Home Tamil Cinema News வெள்ள நிவாரணத்திற்கு நடிகை ஹன்சிகா ரூ.15 லட்சம் நிதியுதவி செய்தார்

வெள்ள நிவாரணத்திற்கு நடிகை ஹன்சிகா ரூ.15 லட்சம் நிதியுதவி செய்தார்

81

hansika_motwani

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக பெய்துவரும் மழை தமிழக மக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மழை கடந்த இரண்டு நாட்களாக ஓய்ந்த நிலையிலும் இன்னும் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுத்தான் கொண்டிருக்கிறது தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிக, நடிகையர் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்து வருகின்றனர்.

சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ள சேதத்திற்கு மத்திய, மாநில அரசுகள் வெள்ள நிவாரணத்திற்கு பெரும் தொகையை வழங்கியுள்ளபோதும், தமிழ் சினிமா நடிகர், நடிகைகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண தொகையும், பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஹன்சிகாவும் ரூ 15 லட்சங்களை நன்கொடையாக அளித்திருக்கிறார்.இந்த நிதி காசோலையாக நடிகர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், நடிகர் சங்கம் மூலமாக முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு அது சென்றடையும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சத்யராஜ், பிரபு, விக்ரம் பிரபு, சிபிராஜ், சிவகார்த்திகேயன், ரஜினி, விஷால் மற்றும் நாசர் ஆகியோர் நிதியுதவி அளித்திருக்கின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ் திரையுலகம் மட்டுமல்ல, தெலுங்கு, இந்தி திரையுலகமும் பல்வேறு உதவிகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.