நடிகை இலியானாவுக்கு விரைவில் திருமணம்

நடிகை இலியானாவுக்கு விரைவில் திருமணம்

88

Ileana

நடிகை இலியானா பாலிவுட்டில் அக்ஷய்குமாருடன் நடித்த ‘ருஸ்தம்’ திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. அதையடுத்து ‘பாட்சகோ’ என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது நீண்டநாள் காதலரும் புகைப்படக் கலைஞருமான ஆண்ட்ரூ என்பவரை, இலியானா தற்போது திருமணம் செய்து கொள்ள போவதாகக் கூறப்படுகிறது.

இதற்காக புதிய படங்களில் ஒப்பந்தமாவதை அவர் தவிர்த்து வருகிறாறாம். விரைவில் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவரின் திருமணமும் நடைபெறும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருமணத்திற்குப் பின் இலியானா தொடர்ந்து நடிப்பாரா என்பது பற்றி தெரியவில்லை.

தமிழ் சினிமாவில் ‘கேடி’ படத்தின் மூலம் அறிமுகமான இலியானா தொடர்ந்து ‘நண்பன்’ படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்தார். ‘நண்பன்’ படம் இலியானாவுக்கு பெயரை வாங்கிக் கொடுத்தாலும் தமிழில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் இல்லை. இதனால் அவரின் கவனம் பாலிவுட் பக்கம் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY