Home Tamil Cinema News வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை லட்சுமி படகு மூலம் மீட்கப்பட்டார்

வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை லட்சுமி படகு மூலம் மீட்கப்பட்டார்

142

lakshmi

கடந்த சில நாட்களாகவே சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இந்நிலையில் மேலும் கனமழை பெய்யும் என்று வேறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். வெள்ளத்தில் சிக்கித் தவித்த சீனியர் நடிகை லட்சுமி படகு மூலம் மீட்கப்பட்டுள்ளார். கண்ணாடி அணிந்து கைப்பையுடன் அவர் படகில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் வெளியாகியுள்ளது.

எங்கு பார்த்தாலும் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளமாக உள்ளதே இதில் மேலும் மழை பெய்தால் நாம் எல்லாம் என்ன செய்வது என்று சென்னை மக்கள் கவலையில் உள்ளனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெள்ளத்தில் தத்தளித்த 62 ஆயிரம் பேரை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இனுப்பினும் பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட இடத்திலேயேதான் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.