Home Tamil Cinema News ரூ 2000 கோடி போதை மருந்து பதுக்கல் பிரபல நடிகையின் கணவருக்கு தொடர்பு

ரூ 2000 கோடி போதை மருந்து பதுக்கல் பிரபல நடிகையின் கணவருக்கு தொடர்பு

111

Mamta-Kulkarni-9148

சினிமா நட்சத்திரங்கள் அவ்வபோது சர்ச்சையில் சிக்குவது சாதரணம் தான். இருப்பினும், மராட்டிய நடிகை மம்தா சிக்கியிருப்பது திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மராட்டிய மாநிலம் தானேயில் கோலாப்பூர் என்ற இடத்தில் மாநில போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஒரு மருந்து தயாரிப்பு குடோனில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்த மருந்து குடோனில் போதை பொருளும் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து வகை மருந்துகளையும் ஆய்வு செய்தனர். இதில் 21 டன் எடையுள்ள கொடிய போதை மருந்து கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.2000 கோடியாகும். இந்த அளவுக்கு போதை பொருள் பதுக்கப்பட்டு இருப்பதை அறிந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதான் நாட்டிலேயே மிகப் பெரிய போதை பொருள் வேட்டையாகும். கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகை மம்தா குல்கர்னி அவரது கணவரான கென் பாவைச் சேர்ந்த விக்கி கோஸ்வாமி ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

இந்த போதை பொருள் கடத்தல் தொடர்பாக தலை மறைவாக இருக்கும் மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள். மராட்டியம் மற்றும் குஜராத் மாநில போலீசார் கூட்டாக வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்த அமலாக் கப்பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். விசாரணைக்குப்பின் இருவரும் போலீஸ் பிடியில் சிக்குவார்கள் என தெரிகிறது. இதனால் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here