Home Tamil Cinema News நயன்தாராவுக்கு இரகசிய திருமணமா? கசியும் தகவல்..

நயன்தாராவுக்கு இரகசிய திருமணமா? கசியும் தகவல்..

101

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விரைவில் இரகசிய திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போதுள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. நானும் ரவுடி தான் படத்தில் நடிக்கும் போது, இவருக்கும் அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டது.

இதன்பின் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை வெளிநாட்டில் பிரமாண்டமாக கொண்டாடினார். அவருக்கு சொகுசு காரை பரிசளித்தார்.

இதையடுத்து ஜோடியாக வலம் வரும் இவர்கள், தங்களது காதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இருவரும் இரகசியமாக திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தவிர, இதை உறுதி செய்யும் விதமாக சென்னையில் பங்களா ஒன்றை இந்த ஜோடி வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

திருமணத்துக்கு பின் அவர்கள் அந்த பங்களாவில் குடியேற திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இந்த தகவலை இரு தரப்பில் இருந்தும் இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.