Home Tamil Cinema News சுதீப்பை இயக்கவிருக்கும் ‘பிரியாமணி’

சுதீப்பை இயக்கவிருக்கும் ‘பிரியாமணி’

134

priyamani_sudeep

அனைத்து நடிகர்களுக்கும் தான் இயக்குனர் ஆகவேண்டும் என்ற கனவு இருக்கும். வாய்ப்புகள் கிடைக்குக் போது அதனை ஒருசிலர் பயன்படுத்திக்கொள்வர். ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகைகள் யாரும் இந்த ரிஸ்க் எடுப்பதில்லை. இருந்தாலும் முந்தய சீனியர் நடிகைகள் ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா, ரேவதி, லட்சுமி ராமகிருஷ்ணன் போன்றோர் இயக்குனர் அவதாரம் எடுக்கின்றனர்.

அந்த வரிசயில் அடுத்து களம் இறங்க முடிவு செய்திருக்கிறார் பிரியாமணி. தமிழில் நடிப்பதை குறைத்துக்கொண்ட பிரியாமணி இதற்கு முன் கடந்த 2012ம் ஆண்டு அதாவது 3 வருடத்துக்கு முன் ‘சாருலதா’ படத்தில் நடித்தார். அதன்பிறகு கன்னடம், மலையாள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

தற்போது இயக்குனர் ஆசை அவரை ஆக்ரமித்திருக்கிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் நான் ஈ நடிகர் சுதீப் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக ெதரிவித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளில் இப்படத்தை இயக்கவிருக்கிறார்.

அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியையும் பிரியாமணி தொடங்கி இருக்கிறார். மற்றவிவரங்களை பிரியாமணி விரைவில் தெரிவிப்பார் என்று தெரிகிறது.