Home Tamil Breaking News காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள குழு தலைவராக நடிகை ரம்யா நியமனம்

காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள குழு தலைவராக நடிகை ரம்யா நியமனம்

78
SHARE

காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள குழுவின் தலைவராக நடிகை ரம்யாவை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நியமித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில், ‘‘காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள குழுவிற்கு ரோதக் தொகுதி எம்பியும், ஹரியாணா முன்னாள் முதல்வர் புபேந்தர் சிங் ஹூடாவின் மகனுமான தீபேந்தர் சிங் ஹூடா இருந்து வந்தார். அவருக்கு பதிலாக, சமூக வலைதள குழு தலைவராக முன்னாள் எம்பி ரம்யா நியமிக்கப்பட்டுள்ளார்”என அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘நடிகை ரம்யா சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். காங்கிரஸ் தொடர்பான செய்திகளை மட்டுமல்லாமல் சமூக பிரச்சினைகள் தொடர்பாகவும் தனது கருத்துக்களை துணிச்சலுடன் பகிர்ந்துள்ளார். அவ்வப்போது எழும் அரசியல் விவாதங்களில் பாஜகவினர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். ரம்யா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸின் சமூக வலைதள குழு புத்துணர்ச்சி பெற்று, கட்சியின் வெற்றிக்கு பாடுபடும். இதன்மூலம் சமூக வலைதளங்களில் வலிமையாக உள்ள பாஜகவுக்கு பெரும் சவால் ஏற்படும்”என்றனர். நடிகை ரம்யா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வரை சந்தித்து ஆசி பெற்றார்.

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here