Home Tamil Cinema News இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் ரித்திகா சிங்

இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் ரித்திகா சிங்

498

ritika singh

ரித்திகாசிங் ‘இறுதிச்சுற்று’ படத்தில் மாதவனுடன் குத்துசண்டை வீராங்கனையாக நடித்திருந்தார். இவர் தனது நடிப்பால் தமிழ், இந்தி பட உலகில் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக திரை உலக பிரபலங்கள் பாராட்டி உள்ளனர்.

‘இறுதிச்சுற்றின்’ தெலுங்கிலும் ரீமேக் ஆகவிருக்கிறது. குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் குத்துச் சண்டை பயிற்சியாளராக நடித்த மாதவன் வேடத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான வெங்கடேஷ் நடிக்க இருக்கிறார்.

ரித்திகா சிங் பயிற்சி வீராங்கனையாக அதே வேடத்தில் நடிக்கிறார். இதற்கு ‘இறுதிச்சுற்று’ பட இயக்குனர் சுதாவும் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்தி, தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ள ரித்திகாசிங் தெலுங்கு பட நாயகி ஆவதால் அந்த ரசிகர்கள் மனதிலும் இடம் பிடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இறுதிச்சுற்று படத்தில் மீன் விற்கும் பெண்ணாகவும், குத்துச்சண்டை வீராங்கனையாகவும் அசத்தி இருந்தார். இது தெலுங்கு பட உலகில் காலடி எடுத்து வைக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கி இருக்கிறது.