Home Tamil Cinema News நடிகை ஸ்ரேயா ரசிகர்கள் மீது கடும் கோபம்

நடிகை ஸ்ரேயா ரசிகர்கள் மீது கடும் கோபம்

117

shriya

இந்தியாவில் பல நட்சத்திரங்கள் வலைதள டுவிட்டர் பக்கத்தில் இணைந்து பிஸியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது ஸ்ரேயா கண்டும் காணாமல் இருந்தார்.

ஆனால் ஸ்ரேயா தற்போது டுவிட்டர் கணக்கு தொடங்க முற்பட்டார். அவரது பெயரில் ஏற்கனவே பல போலி கணக்குகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சமீபத்தில் ஸ்ரேயா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கு தொடங்கினார். அதிலும் தனது பெயரில் பக்கங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியும். கோபமும் அடைந்தார். தனது கோபத்தை ரசிகர்கள் மீது வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதுபற்றி ஸ்ரேயா கூறியது- எதற்காக சிலர் மற்றவராக மாற முயல்கிறார்கள். மற்றொருவரது அடையாளத்தை ஏன் திருடுகிறார்கள். என் பெயரில் டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் அவர்கள் ஒளிந்துகொண்டிருப்பது ஏன்? இதுபோன்றவர்களுடன் இணைந்திருப்பதென்பது வலி தரக்கூடியது என்பதை உணர்ந்திருக்கிறேன்.

எனக்கு ஏன் இவ்வளவு தொல்லை தருகிறார்கள் என்று தெரியவில்லை. என் கோபத்தை அடக்க முடியவில்லை. நீங்கள் ரசிகராக எனக்கு தெரியவில்லை போலியான பெயருடன் உலவுவதால் நீங்கள் ஒரு முட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். என் பெயரில் இணைய தள பக்கம் நடத்துபவருக்கு ஃபாலோயர்கள்கூட நிறையபேர் இருக்கிறார்கள். உங்கள் அன்பை எனக்கு கொடுங்கள். உங்கள் முட்டாள்தனத்தை அல்ல. இவ்வாறு ஸ்ரேயா குறிப்பிட்டிருக்கிறார்.