Home Tamil Cinema News ஸ்ரேயாவின் கல்யாணக் கனவு

ஸ்ரேயாவின் கல்யாணக் கனவு

175

Shriya-Saran

கவர்ச்சிக்கும் நடிப்புக்கும் கொஞ்சம் கூட குறைவைக்காத ஸ்ரேயா தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர். தற்போது தெலுங்கு, இந்திப்படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இவர் மற்ற தமிழ் நடிகைகளை போல் இல்லாமல் தனது உடல் அழகு தோற்றத்தில் கவனம் செலுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவர். 

ஸ்ரேயா அளித்த பேட்டி: என் கவர்ச்சி தோற்றத்துக்கு உணவும் உடற்பயிற்சியும்தான் காரணம். தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்கிறேன். உடற்பயிற்சியை நடிகைகள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. எல்லோரும் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும். அப்பொதுதான் ஆரோக்கியமான தலைமுறையை நம்மால் உருவாக்க முடியும்.

மனதில் நல்ல எண்ணங்கள் இருந்தால் தன்னம்பிக்கை வளரும். அந்த தன்னம்பிக்கை ஒருவரை அழகாக காட்டும். அழகு என்பது மனது சம்பந்தமானது. எனக்கு நல்ல எண்ணங்களும், தன்னம்பிக்கையும் நிறைய இருக்கிறது.

காலை உணவாக புரோட்டாவும் வெள்ளை கருவில் ஆம்லேட்டும் சாப்பிடுகிறேன். ஆரஞ்சு பழச்சாறும் அருந்துவேன். மதியம் பருப்பு, காய்கறி குழம்பு, ரொட்டி சாப்பிடுவேன். இரவில் ‘கிரில்டு சிக்கன்,’ மீன் சாப்பிடுவேன். ஐஸ்கிரீம், இனிப்பு வகைகளை தொட மாட்டேன். எனக்கு சினிமாவில் யாரும் போட்டி இல்லை. ஒவ்வொரு நடிகைக்கும் தனித்தனித் திறமை இருக்கிறது. அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு வாய்ப்புகள் தேடிவரும். நான் அதிர்ஷ்டத்தை விட கடின உழைப்பையே நம்புகிறேன்.

ஒரு நடிகைக்கு படங்கள் குறைந்து இன்னொரு நடிகைக்கு நிறைய படங்கள் வந்தால் நான்தான் உயர்ந்த நடிகை என்று நினைக்கக்கூடாது. அதுபோல் படங்கள் குறையும் நடிகை தன்னை தாழ்வாகவும் நினைக்கக்கூடாது. அவரவர் கதாபாத்திரத்துக்கு ஏற்ற கதைகள் நிச்சயம் கிடைக்கும். என்னை மிகவும் சந்தோஷப்படுத்துவது ஓய்வில்லாத வேலை.

எப்போதும் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். வேலை இல்லாமல் இருந்தால் பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிடும். பார்வை இல்லாதவர்கள் ஒவ்வொரு நாளும் எப்படி சிரமப்படுவார்கள் என்று நினைக்கும் போது கஷ்டமாக இருக்கும். இதற்காகவே நான் மும்பையில் நடத்தும் அழகு நிலையத்தில் பார்வையற்றவர்களை வேலைக்கு வைத்துள்ளேன்.

எனக்கு கதக் நடனமும், ராஜஸ்தானிய கிராமிய நடனமும் தெரியும். முழுக்க நடனத்தை மையமாக வைத்து தயாராகும் படம் ஒன்றில் நடன கலைஞர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசையாக இருக்கிறது.

சினிமாவில் எனக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டது இல்லை. எல்லா துறைகளிலுமே நல்லதும் கெட்டதும் இருக்கிறது. நம்ம வேலையை மட்டும் பார்த்துவிட்டுப்போனால் எந்த பிரச்சினையும் இல்லை. பெண் சுதந்திரம் பற்றி பேசப்படுகிறது. என்னை கேட்டால் ஆணுக்கும் சுதந்திரம் வேண்டும் பெண்ணுக்கும் சுதந்திரம் வேண்டும்.

ஆண் இல்லாமல் பெண் இல்லை. பெண் இல்லாமல் ஆண் இல்லை. இருவரும் சேர்ந்தால்தான் எதுவும் சாத்தியமாகும். எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. திருமணம் என்பது எனக்கு ஏற்கனவே தலையில் எழுதப்பட்ட விஷயம்.

நேரம் வரும்போது எனக்கானவர் என் எதிரில் வந்து நிற்பார். அப்போது அவர் மீது காதல் வரும். திருமணமும் செய்துகொள்வேன். எனக்கு கணவராக வருபவர் பெண்களை கவுரவிப்பவராக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

ஸ்ரேயாவுக்கு துணையாக வரும் ஆன்மீகவாதி யாரென்று பொருத்திருந்துதான் பார்க்கனும் போல.