Home Tamil Cinema News நடிகை சன்னி லியோன் விரைவில் தாயாக திட்டமாம்!

நடிகை சன்னி லியோன் விரைவில் தாயாக திட்டமாம்!

109

sunny-leone

நடிகை சன்னி லியோன் விரைவில் தாயாக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாராம். சன்னி லியோன் வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

மேலும் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்கி தனது கணவர் டேனியல் வெபருடன் சேர்ந்து ஆபாச படங்களை தயாரித்தும் வந்தார். நடிகையும், இயக்குனருமான பூஜா பட் தான் சன்னி லியோனை பாலிவுட்டுக்கு அழைத்து வந்தார்.

தற்போது பாலிவுட்டில் செட்டில் ஆகியுள்ள சன்னிக்கு தாயாகும் ஆசை வந்துள்ளது. மாமியார் வேறு எப்பொழுது பேரக் குழந்தையை பெற்றுத் தரப் போகிறாய் என்று கேட்கிறாராம். அதனால் விரைவில் தாயாக திட்டமிட்டுள்ளார் சன்னி.

நானும், டேனியலும் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறோம். அதற்கான நேரத்தை தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதற்கிடையே படப்பிடிப்புகளில் வேறு பிசியாக உள்ளேன் என்கிறார் சன்னி லியோன்.