Home Tamil Cinema News நடிகை தமன்னா தனது 26 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்தார்

நடிகை தமன்னா தனது 26 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்தார்

139

tamanna

தமிழ் சினிமாவின் மில்க் பியூட்டி என்று அழைக்கப்படும் நடிகை தமன்னா நேற்று தனது 26 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

மகாராஸ்டிரா மாநிலம் மும்பையில் சந்தோஷ் – ரஞ்சனி பாட்டியா தம்பதிகளுக்கு 1989 ம் வருடம் டிசம்பர் மாதம் 21 ம் தேதி தமன்னா மகளாகப் பிறந்தார்.

2005 ம் ஆண்டு தனது 15 வது வயதில் சந்த் ஸா ரோஷன் சேரா என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் தமன்னா அறிமுகமானார். அதே ஆண்டு ஸ்ரீ என்ற படத்தின் மூலம் டோலிவுட்டிலும் இவர் கால் பதித்தார்.

தொடர்ந்து வெளியான படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, பையா மற்றும் சிறுத்தை போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் வெற்றி நாயகியாக தமன்னா மாறினார்.

இடையில் சில காரணங்களால் தமிழ் சினிமாவில் காணாமல் போயிருந்த தமன்னாவை தனது வீரம் படத்தின் மூலம் அஜீத் மீட்டு வந்தார். வீரம் படத்தில் அஜீத்தின் காதலியாக கோப்பெருந்தேவி என்னும் கதாபாத்திரத்தில் தமன்னா நடித்திருந்தார்.

நேரடியாகவும் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியான பாகுபலி, தமன்னாவின் மார்க்கெட்டை மீண்டும் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. உலகம் முழுவதும் வசூலை வாரிக்குவித்த இந்தப் படத்தில் பிரபாஸின் காதலியாக, அவந்திகா என்னும் புரட்சிப்பெண் காதாபாத்திரத்தில் தமன்னா நடித்திருந்தார்.

நடிக்க வந்த 11 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இதுவரை 35 படங்களுக்கும் அதிகமாக நடித்திருக்கிறார். இதில் ஹேப்பி டேஸ், பாகுபலி (தெலுங்கு) மற்றும் கல்லூரி, கண்டேன் காதலை ஆகிய படங்கள் தமன்னாவின் திரையுலகில் சொல்லிக் கொள்ளும் படங்களாக அமைந்திருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here